கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்ப்பதற்காக தங்கள் தரப்பு எம்.எல்.ஏக்கள் 50 பேருக்கு தலா 50 கோடி ரூபாய் தருவதாக பாஜக பேரம் நடத்தியதாக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிவக்குமார், பாஜகவின் ஆபரேஷன் தாமரை திட்டத்தில் தங்களிடம் பேரம் பேசப்பட்டதை எம்.எல்.ஏக்கள் நேரடியாகவே முதலமைச்சரிடம் தெரிவித்ததாகவும், பாஜகவின் தூண்டிலில் ஒரு போதும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சிக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.