பிரதமர், உள்துறை அமைச்சர் உட்பட பாஜக மூத்த தலைவர்கள் அனைவரும், கடந்த காலத்தை பற்றி மட்டுமே பேசுவதாகவும் நிகழ்காலம் அல்லது எதிர்காலத்தை பற்றி பேசுவதில்லை என்றும் காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். பீகாரின் பெகுசராய் பகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் உரையாற்றிய அவர், பீகார் மக்களை பாஜக பலவீனப்படுத்தி வருவதாகவும், மக்களுக்கு கிடைக்கும் அரசின் திட்டங்கள் மற்றும் பலன்கள் குறைந்துள்ளதாகவும் குற்றச்சாட்டினார். மத்திய மாநில அரசுகள் வேலைவாய்ப்பை வழங்க தவறிவிட்டதால் தான், கேரளா முதல் காஷ்மீர் வரை பல்வேறு மாநிலங்களில் பீகார் மக்கள் வேலைபார்ப்பதை பார்க்க முடிவதாக பிரியங்கா காந்தி விமர்சித்தார்.