மொழி அடிப்படையில் மக்களை பிரிக்க பாஜக முயற்சி செய்வதாக சிவசேனாவின் ஒரு பிரிவு தலைவர் உத்தவ் தாக்கரே குற்றம்சாட்டி உள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கூட்டணியில் உள்ள அஜித் பவார் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இந்த சூழலில், இதுகுறித்து பேசிய உத்தவ் தாக்கரே, தாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல எனவும், எந்த மொழியையும் வெறுப்பவர்கள் அல்ல எனவும், அதேசமயம் எந்தவொரு மொழியையும் திணிப்பதை அனுமதிக்க மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், ஆளும்கட்சியான பாஜக மொழி எமர்ஜென்ஸியை அமல்படுத்தி உள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.இதையும் படியுங்கள் : ”எந்த மொழிக்கும் இந்தி எதிராக இருக்க முடியாது”