அரசு பங்களாவை காலி செய்யும் போது, அதில் இருந்து சோபா, எச்சி, மின் விளக்குகள் ஆகிய பொருட்களை திருடிச் சென்று விட்டதாக, பீகார் மாநில எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் மீது பாஜக திருட்டு புகார் கூறியுள்ளது. ஆனால் இதை மறுத்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தள நிர்வாகிகள், பங்களாவை ஒப்படைக்கும் போது இருந்த பொருட்களின் விவரங்களை வெளியிட வேண்டும் என வலியுறுத்தினர்.