பீகார் தேர்தலுக்கான 3-ஆவது வேட்பாளர் பட்டியலையும் பாஜக வெளியிட்டுள்ளது. இதன் மூலம், போட்டியிடும் 101 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலையும் பாஜக வெளியிட்டுள்ளது. முதல்கட்டமாக 71 பேர் அடங்கிய முதல் பட்டியலை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட நிலையில், 12 பேர் கொண்ட 2-ஆவது பட்டியலையும், 18 பேர் கொண்ட 3-ஆவது பட்டியலையும் நேற்று வெளியிட்டது. அதே போல் மகாகத்பந்தன் கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி 12 பேர் அடங்கிய முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.