நிதிஷ் குமார் தலைமையிலான என்.டி.ஏ அரசு பீகாரை குற்றச் சம்பவங்களின் தலைநகராக மாற்றிவிட்டதாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ராகுல், இன்றைய சூழலில் பீகார் கொலை, கொள்ளை மற்றும் துப்பாக்கிச்சூடு போன்ற குற்றச் சம்பவங்களின் நிழலில் இயங்குவதாகவும், குற்றங்கள் வாடிக்கையாகிவிட்டதோடு, அரசு முற்றிலுமாக தோல்வி அடைந்துவிட்டதாகவும் விமர்சித்துள்ளார். பாட்னாவில் பாஜக பிரமுகரும், தொழிலதிபருமான கோபால் கெம்கா படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, பீகாரில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு விட்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.