பீஹார் சட்டமன்ற தேர்தலில் என்டிஏ கூட்டணி கட்சிகளான பாஜகவும், ஐக்கிய ஜனதா தளமும் சரி பாதியாக தொகுதிகளை பிரித்துக் கொள்ள முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் தலைமையில் என்டிஏ கூட்டணி ஆட்சி நடக்கும் நிலையில், அடுத்த மாதம் நடக்க உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 205 தொகுதிகளை தங்களுக்குள் பிரித்துக் கொள்ள பாஜகவும், ஐக்கிய ஜனதா தளமும் முடிவு செய்து, எஞ்சிய 38 தொகுதிகளை கூட்டணியில் இருக்கும் சிறிய கட்சிகளுக்கு பகிர்ந்து கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.