பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டிருக்கிறது. நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜன சக்தி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில், 71 இடங்ளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. துணை முதலமைச்சர்களான சம்ராத் சவுத்ரி தாராபூரிலும் விஜய் குமார் சின்ஹா லக்கிசராயிலும் போட்டியிருகின்றனர்.