பெலகாவி மாவட்டம் கர்நாடகாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், அதனை மகாராஷ்டிராவிடம் சேர்ப்பதை அனுமதிக்க முடியாது எனவும், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.மகாராஷ்டிரா எல்லையில் அமைந்துள்ள பெலகாவி பகுதி, கர்நாடகாவின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. இதனை மகாராஷ்டிரா மாநிலம் உரிமை கோருவதால் நீண்ட காலமாக இரு மாநிலங்களுக்கு இடையே பிரச்னை இருந்து வருகிறது. பெலகாவியில் தங்களுக்கு உள்ள உரிமையை நிரூபிக்க அங்கு சட்டசபை கூட்டத்தொடரை கர்நாடக அரசு நடத்தி வருகிறது.