அரசியலமைப்பு நிறுவனமான தேர்தல் ஆணையத்தின் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறுவதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மேலும் வாக்காளர் சிறப்பு திருத்தம் குறித்து பொதுமக்களை தவறாக வழி நடத்துவதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.