மும்பையில் சட்டவிரோத பைக் டாக்ஸிகள் இயக்கப்படுவதாக எழுந்த புகாரையடுத்து, அம்மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் பிரதாப் சர்நாயக், Rapido செயலியில் பைக் டாக்ஸியை புக் செய்து சோதனை செய்தார். மும்பையில் சட்டவிரோத பைக் டாக்ஸிகள் செயல்படவில்லை என்ற அதிகாரியின் கூற்றை சோதிக்க அமைச்சர் முடிவு செய்தார். புக் செய்த பத்து நிமிடங்களில் அவரை பிக்கப் பண்ண வந்த ஓட்டுநரிடம், தான் அமைச்சர் என்பதை அறிமுகப்படுத்திக்கொண்டவர் விதிகள் அனைத்தும் உங்களின் நலனுக்காகவே என கூறியதோடு, அந்த ஓட்டுநருக்கு 500 ரூபாயை வழங்கினார். ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்வதன் மூலம் எதுவும் நடக்காது என்றவர் சட்டவிரோத நடவடிக்கைக்குப் பின்னால் உள்ளவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம் என்றார்.