பட்ஜெட் ஏர்லைன்சான ஸ்பைஸ்ஜெட் மீது, அயர்லாந்தில் உள்ள விமான வாடகை ஒப்பந்த நிறுவனமான ஏர்கேசில் தொடுத்த திவால் வழக்கு திரும்ப பெறப்பட்டுள்ளது. விமானங்களை வாடகைக்கு எடுத்த வகையில் இந்த நிறுவனத்திற்கு ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கோடிக்கணக்கில் நிலுவை வைத்துள்ளது. இதை அடுத்து ஸ்பைஸ்ஜெட் மீது தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருதரப்பினரும் சமரசம் செய்து கொண்டு, ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ஏர்கேசிலுக்கு சுமார் 4 ஆயிரத்து 700 கோடி ரூபாய் வழங்குவதாக முடிவு செய்யப்பட்டது. இதை அடுத்து திவால் வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்ள ஏர்கேசிலுக்கு தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம் அனுமதி வழங்கியது.