வங்காள மொழியை வங்கதேச மொழி எனக்குறிப்பிட்டு கடிதம் அனுப்பிய டெல்லி காவல்துறைக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் வங்காளம் பேசும் மக்களுக்கு ஏற்பட்ட அவமானம் எனவும், இந்திய அரசுக்கு எதிராக வலிமையான எதிர்ப்பை பதிவு செய்வதாகவும் கூறியுள்ளார்.