உத்தரபிரதேசத்தில் அயோத்தி ராமர் கோவிலை சுற்றி 15 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு அசைவ உணவு டெலிவரி செய்ய தடை விதித்து அயோத்தி மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அயோத்தி மற்றும் பைசாபாத்தை இணைக்கும் 14 கிலோ மீட்டர் ராமர் பாதையில் மது மற்றும் இறைச்சி விற்பனையை தடை செய்ய கடந்த ஆண்டு மே மாதம் மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்படி, அயோத்தியின் ‘பஞ்சகோசி பரிக்ரமா’ எல்லைகளுக்குள் இறைச்சி, மது விற்க தடை உள்ளது. அதையும் மீறி, ‘பஞ்சகோசி பரிக்ரமா’ எல்லைகளுக்குள் இறைச்சி விற்பனை நடைபெறுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதையும் படியுங்கள் : மைத்துனியை கொ*ல செய்த அக்காவின் கணவர்