ஜம்மு காஷ்மீரின் ராம்பனில் செனாப் நதியின் மீது கட்டப்பட்டுள்ள பாக்லிஹார் நீர்மின் திட்ட அணையின் கதவுகள் திறக்கப்பட்டது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா சிந்து நதி நீர் பங்கீடு தொடர்பான ஒப்பந்தத்தை இடை நிறுத்தம் செய்வதாக அறிவித்தன் காரணமாக பாக்லிஹார் அணையின் கதவுகள் மூடப்பட்டன. இதனால் பாகிஸ்தானுக்கு செனாப் நதி நீர் செல்வது நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அங்கு பலத்த மழை பெய்ததால், அதிகரித்து வரும் நீர் மட்டத்தை நிர்வகிக்க கதவுகள் திறக்கப்பட்டதாக கூறப்படுகிறது.