அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து நடந்த இரண்டு நாட்களில், டெல்லயில் இருந்து வியன்னாவுக்கு சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் நடுவானில் திடீரென 900 அடி தாழ்ந்த தால் அதில் இருந்த பயணிகள் அலறிய தகவல் இப்போது வெளியாகி உள்ளது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனையே இதற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது. AI 187 என்ற இந்த விமானம் டெல்லியில் இருந்து புறப்படும் போதே வேகமான காற்றுடன் மோசமான காலநிலை நிலவியதாகவும் , டேக் ஆஃப் ஆன சில நிமிடங்களில் 900 அடிக்கு அது தாழ்ந்த தாகவும் கூறப்படுகிறது. இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விசாரணை நடத்தி வருகிறது.