ஆக்சியம் 4 திட்டம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்ல இருந்தனர். பால்கன் 9 ராக்கெட் மூலமாக இக்குழு புறப்பட இருந்த நிலையில், ராக்கெட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.