பிரதமர் மோடியை விமர்சித்து விமர்சித்து தங்களுக்கு சலித்து விட்டதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கிண்டலாக கூறினார். வயநாடு இடைத்தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்திக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட அவர், பிரதமரை பற்றி பிரியங்காவே பேசி விட்டதால் மீண்டும் பேச வேண்டாம் என நினைப்பதாக தெரிவித்தார்.