இந்தூரில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சங்கம் வருத்தம் தெரிவித்துள்ளது. சங்கத்தின் செயலாளர் தேவ்ஜித் சைக்கியா வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த சம்பவத்தை மிகவும் கண்டிப்பதாகவும் அது துரதிர்ஷ்டமானது எனவும் தெரிவித்துள்ளார். விருந்தினர்களை நல்லபடியாக உபசரிக்கும் இந்தியாவில் இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என யாருமே எதிர்பார்க்கவில்லை என குறிப்பிட்டுள்ள அவர், போலீசார் விரைந்து செயல்பட்டு குற்றவாளியை கைது செய்து விட்டதாகவும் அவர் சட்டத்தின்படி தண்டிக்கப்படுவார் எனவும் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு ஏற்கனவே பாதுகாப்பு வலையம் இருப்பதாகவும் இனி மேல் இப்படி நடக்காதவாறு பார்த்துக் கொள்ளப்படும் எனவும் தேவ்ஜித் சைகியா தெரிவித்துள்ளார்.