கனடாவில் இந்து கோவில்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய தூதர்களை அச்சுறுத்துவதற்கான கோழைத்தன முயற்சிகளில் சிலர் ஈடுபட்டுள்ளதாக காட்டமாக தெரிவித்த மோடி, இதுபோன்ற வன்முறை செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தி விட முடியாது என்றார்.