பால் தாக்கரேவை கடுமையாக விமர்சித்த காங்கிரசிடம் தனது கட்சியின் ரிமோட் கண்ட்ரோலை உத்தவ் தாக்கரே வழங்கியிருப்பதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ராமர் கோயிலை எதிர்த்து பேசிய எதிர்க்கட்சிகள், இன்று காவி உடை அணிந்துகொண்டு வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுவதாக கடுமையாக சாடினார். மேலும், காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக தாக்கரே குடும்பத்தை எதிர்த்து அரசியல் செய்துவந்ததாகவும், தற்போது அவர்களுடனே கூட்டணி வைத்திருப்பதாகவும் விமர்சித்தார்.