ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து, உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் எம்பி அசாதுதீன் ஓவைசியின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டிக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப்பின் பதாகைகளை தரையில் போட்டு மிதித்தும் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.