ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கியில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அரையிறுதியில் கொரியா அணியை 4-1 என்ற கணக்கில் வென்ற இந்தியா இறுதிப்போட்டியில் சீனாவை சந்தித்தது. ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி இறுதிப்போட்டியில் இந்திய அணி சீனாவை 1க்கு 0 என்ற கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. 4-வது காலிறுதியின் 6-வது நிமிடத்தில் இந்திய வீரர் ஜுக்ராஜ் சிங் கோல் அடித்து அசத்தினார்.