கொல்கத்தாவில் ராணுவத்திற்கு சொந்தமான இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் அமைத்திருந்த போராட்ட பந்தலை வீரர்கள் பிரித்து அகற்றியதற்கு அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக ஆளும் மாநிலங்களில் மேற்கு வங்க மாநில மக்கள் துன்புறுத்தப்படுவதாக புகாரை முன்வைத்து போராட்டம் நடத்தப் போவதாக திரிணாமுல் அறிவித்திருந்தது. இதற்காக அமைக்கப்பட்டிருந்த பந்தலை வீரர்கள் அகற்றிய நிலையில், ராணுவம் மூலம் மத்திய அரசு தங்களின் குரலை ஒடுக்க முயற்சிப்பதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார். ஆனால், 2 நாட்களுக்கு மட்டுமே அனுமதி வாங்கிவிட்டு ஒரு மாதத்துக்கு மேலாக பந்தலை காலி செய்யாததால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் விளக்கம் கொடுத்துள்ளனர்.