இந்திய ராணுவம் நடவடிக்கை : இந்தியாவில் காலனி ஆதிக்கத்தின்போது கட்டடங்கள், சாலைகளுக்கு வைக்கப்பட்ட பெயர்களை நீக்கிவிட்டு, அவற்றிற்கு பதிலாக தேசத்தின் வீரதீர செயல்களுக்கான விருது வென்றவர்கள், போர் நாயகர்களின் பெயர்களை வைக்கும் நடவடிக்கையில் இந்திய ராணுவம் ஈடுபட்டு வருகிறது. அதன்படி நாடு முழுவதும் பூங்காக்கள், பயிற்சி பகுதிகள், விளையாட்டு மைதானங்கள், நுழைவு வாசல்கள், ஹெலிபேட்கள் உள்பட 124 சாலைகள், 77 காலனிகள், 27 கட்டிடங்கள் மற்றும் பிற ராணுவ அமைப்புகள் உள்ளிட்டவற்றின் பெயர்கள் மாற்றப்பட உள்ளன. Related Link தலைநகர் டெல்லியில் நிகழும் அதிர்ச்சியூட்டும் சம்பவம்