கர்நாடக மாநிலம் மங்களூருவில் பயணிகள் முன்னிலையில் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் தாக்கி கொண்ட அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. மங்களூருவின் பால்மட்டா பகுதியில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த இரண்டு தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. தொடர்ந்து ஒட்டுநர்களும், நடத்துநர்களும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டதை கண்டு பயணிகள் அச்சமடைந்தனர். இது குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ள நிலையில், மங்களூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.