கடந்த மே மாதம் 4ஆம் தேதி நடந்த நீட் தேர்வின் போது மின்சாரம் துண்டிப்பால் சரியாக தேர்வு எழுதவில்லை என, மறு தேர்வு நடத்த கோரிய மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆவடி கேந்திரிய வித்யாலயா பள்ளி மையத்தில் தேர்வு எழுதிய 13 மாணவர்கள் உள்ளிட்ட 16 பேர் ஏற்கனவே தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம், தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாக நிரூபிக்காதவரை, மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது எனவும், அப்படி உத்தரவிட்டால் 20 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்பதால் வழக்கை ஏற்க முடியாது எனவும் தெரிவித்தது.