மீண்டும் நிலநடுக்கம் : ஆப்கானிஸ்தானில் நேற்று மாலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. மாலை 4.42 மணியளவில் 80 கிலோ மீட்டர் ஆழத்தில் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால், பாதிப்புகள் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை. எனினும், ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவதால், அந்நாட்டு மக்களிடையே பதற்றமான சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே, கடந்த 20-ம் தேதி 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமும், 23-ம் தேதி 4 ரிக்டர் அளவில் நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளது. Related Link ரஷ்யா - உக்ரைன் போரை உடனடியாக நிறுத்த அழைப்பு