ஜம்மு - காஷ்மீரில், செய்தியாளர் உருது மொழியில் பேச சொன்னதால் ஆத்திரமடைந்த அம்மாநில முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி, தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் ஆங்கிலம் அல்லது உருதுவில் பேச சொல்லி கேட்பீர்களா? என ஆவேஷமாக கேள்வி எழுப்பினார். ஜம்மு - காஷ்மீரில் எஞ்சியிருப்பது காஷ்மீரி மொழி மட்டுமே என தெரிவித்த மெஹபூபா முப்தி, தாம் காஷ்மீரியில் பேசுவதை, உருது மொழியில் மொழிபெயர்த்துக் கொள்ளுங்கள் என தெரிவித்தார்.