பீகாரில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதை விட்டும் விலகியுள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, அதற்கு கூட்டணி கட்சிகளான ஆர்ஜேடியும் காங்கிரசுமே காரணம் என குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த இரு கட்சிகளும் நடத்திய அரசியல் சதியால் பீகார் தேர்தலில் போட்டியிட முடியாமல் போய் விட்டதாக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் மூத்த தலைவர் சுதிவ்யா குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தங்களை ஏமாற்றிய ஆர்ஜேடி மற்றும் காங்கிரசுக்கு பதிலடி தரும் விதமாக, ஜார்க்கண்டில் இந்த கட்சிகளுடன் வைத்திருக்கும் கூட்டணியை தொடர்வது குறித்து மறுபரிசீலனை செய்வோம் எனவும் அவர் தெரிவித்தார். கூட்டணிக்குள் ஒற்றுமை ஏற்படாத நிலையில் பீகாரில் தனித்து போட்டியிடுவோம் என அறிவித்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தற்போது அந்த முடிவில் இருந்து பின்வாங்கி உள்ளது.