நாடு முழுவதும் உள்ள கோவில்கள் குறித்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண சனாதன தர்ம பாதுகாப்பு வாரியத்தை அமைக்க வேண்டும் என ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் வலியுறுத்தி உள்ளார். திருப்பதி லட்டு பிரசாதத்தில் மிருக கொழுப்பு கலக்கப்பட்டதாக வெளியாகும் அதிர்ச்சித் தகவலின் பின்னணியில், தமது எக்ஸ் பக்கத்தில் இதை பதிவிட்டுள்ள அவர், திருப்பதி லட்டு பிரசாதத்தில் மிருக கொழுப்பு கலக்கப்பட்டது என்ற செய்தி கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளார். ஜெகன் மோகன் அரசு நியமித்த திருப்பதி திருமலை தேவஸ்தானம் இதற்கு பதிலளிக்க வேண்டும் என பவன் கல்யாண் வலியுறுத்தியுள்ளார். கோவில்கள் மற்றும் கோவில் நிலங்கள் தொடர்பாக இருக்கும் பிரச்சனைகளையும் தர்ம ரீதியான செயல்பாடுகளையும் குறித்து விசாரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.