பிரபல பன்னாட்டு நிறுவனமான எர்ன்ஸ்ட் அண்ட் யங் நிறுவனத்தில் பணியாற்றிய இளம்பெண் ஊழியர் பணிச்சுமையால் உயிரிழந்த சுவடு மறைவதற்குள், உத்தரபிரதேசத்தில் பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவன ஊழியர் வேலைப்பளுவால் தற்கொலை செய்துகொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் ஈ.எம்.ஐ கலெக்ஷன் பிரிவில் பணியாற்றி வந்த 42 வயதான தருண் சக்சேனா என்பவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். நிறுவனத்தின் இலக்கை அடைய மேலாளர் கொடுத்த அதீத அழுத்தமும், சம்பள பிடித்தம்-வேலை இழப்பு போன்ற மிரட்டல்களுமே தற்கொலைக்கு தள்ளியதாக அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியுள்ளது.