சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு, கானக பாதை வழியாக நடை பயணமாக சென்ற, ஆந்திர மாநில பக்தர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டலகால பூஜை துவங்கியுள்ள நிலையில், நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் 25 பேர் கொண்ட குழுவுடன் சபரிமலைக்கு வந்த ஆந்திராவை சேர்ந்த மல்லிகார்ஜுன ரெட்டி என்பவர், வண்டிபெரியாறு சத்திரத்திலிருந்து சன்னிதானத்திற்கு புல்மேடு கானக பாதையில் நடை பயணமாக சென்ற போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது உடல், உடற்கூறாய்வுக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.இதையும் பாருங்கள் - சபரிமலையில் இந்த நிலைமையா? - வேதனையின் உச்சத்தில் ஐயப்ப பக்தர்கள் | Sabarimalai | WaterIssue