மகாராஷ்டிராவில் பிரபல சுற்றுலாத்தலத்தில் காரை வைத்து சாகச முயற்சியில் ஈடுபட்ட நபர், அந்த காருடன் 300 அடி ஆழ பள்ளத்தில் தவறி விழுந்து படுகாயமடைந்தார். சதாரா மாவட்டம் பதான் நகரிலிருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள Table Point எனும் சுற்றுலாத்தலத்தில், Sahil Anil Jadhav என்ற நபர் தனது நண்பர்கள் முன்பு காரை வட்டமாக இயக்கி சாகசத்தில் ஈடுபட முயன்ற போது, கட்டுப்பாட்டை இழந்த கார் 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. நல்வாய்ப்பாக படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சாஹில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.