சத்பூஜையை நாடகம் என்று விமர்சித்ததற்காக ராகுல் காந்தியை உள்துறை அமைச்சர் அமித்ஷா கடுமையாக சாடியுள்ளார். பீகாரின் லக்கிசராய் நகரில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அமித்ஷா, இத்தாலியை தாய் வழியாக கொண்டவர்களுக்கு இந்திய நம்பிக்கைகளின் மகத்துவம் எப்படி தெரியும்? என விமர்சித்தார். பீகாரில் பெண்கள் வழிபடும் சத் பூஜையை விமர்சித்து இழிவுபடுத்தியதாகவும், பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியதாகவும் கூறி கண்டனம் தெரிவித்தார்.