கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை தமிழ்நாட்டுக்கு ஒதுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கை நிதியுடன் இதை தொடர்புபடுத்தக் கூடாது என நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.