டெல்லியின் பல்வேறு இடங்களில் காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசமான நிலையை எட்டியதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. ஆனந்த் விஹாரில் இன்று காலை காற்றின் தரக்குறியீடு 307 என்ற மிகவும் மோசமான நிலையிலும். இந்தியா கேட் பகுதியில் 282 ஆகவும் பதிவாகியிருந்தது. காற்று மாசுவை குறைக்கும் வகையில் லோதி சாலையில் தண்ணீர் தெளிப்பான் மூலம் சாலைகளில் தண்ணீர் தெளிக்கப்பட்டது. அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் பயிர் கழிவுகள் மற்றும் வாகனங்களின் புகையே டில்லியில் காற்று மாசு அதிகரிக்க காரணமாக கூறப்படுகிறது. இதனால் சுவாச பிரச்னை, கண் எரிச்சல், தொண்டை வலியால் அவதிப்படுவதாக மக்கள் புலம்புகின்றனர்.