டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்து புகைமூட்டத்துடன் பனிமூட்டமும் நிலவியதால் அருகில் இருந்தவர்கள் கூட தெரியாத அளவிற்கு புகை சூழ்ந்து மக்கள் சிரமமடைந்தனர். கடந்த சில நாட்களாக டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக எங்கும் புகை மண்டலமாக காட்சியளிக்கும் நிலையில், காலை 8மணி நிலவரப்படி காற்றின் தரம் 386 ஐ எட்டி மோசமான நிலைமைக்கு சென்றது. இதனால் இந்தியா கேட் பகுதி முழுவதையும் புகை மற்றும் மூடுபனியால் சூழ்ந்தது.