தலைநகர் டெல்லியில் காற்று மாசு மோசமான நிலையில் இருப்பதால், சாலைகள் புகை மூட்டமாகி வாகன ஓட்டிகள் திணறும் நிலை ஏற்பட்டது. காற்றின் தரக்குறியீடு 349ஆகபதிவாகி இருக்கும் நிலையில், எங்கு பார்த்தாலும் புகை மூட்டமாக இருப்பதால் வாகனஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடியே சென்றனர். தீபாவளிக்கு முன்பாகவே காற்றின் தரம் இவ்வளவு மோசமாகி இருப்பது டெல்லி மக்களை கவலை அடையச்செய்துள்ளது.