அகமதாபாத் விபத்திற்கு பிறகு நிறுத்தி வைக்கப்பட்ட சர்வதேச விமான சேவைகளில் சிலவற்றை மட்டும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் மீண்டும் தொடங்க உள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த மாதம் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் 260 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து ஏர் இந்தியா விமானங்களில் பயணம் செய்ய மக்கள் தயக்கம் காட்டவே, சர்வதேச விமான சேவைகளை பகுதியளவு நிறுத்தியது.