ஏர் இந்தியா நிறுவனம் இன்று எட்டு விமானங்களை ரத்து செய்ததால் பயணிகள் அவதிக்கு உள்ளாகினர். பராமரிப்பு பணிகளை மேம்படுத்துவதாவும், விமானங்களை இயக்குவதில் கூடுதல் கவனம் செலுத்துவதாகவும் கூறி இந்த விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் ரத்து செய்துள்ளது. அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா டிரீம்லைனர் விபத்துக்கு பிறகு, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் உத்தரவின்படி,பாதுகாப்பு சோதனைகளை ஏர் இந்தியா தீவிரப்படுத்துவதால் தொடர்ந்து பல நாட்களாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இன்று துபாய்-சென்னை, டெல்லி-மெல்போர்ன்,மெல்போர்ன்-டெல்லி, துபாய்-ஹைதராபாத் ஆகிய பன்னாட்டு சேவைகளும், புனே-டெல்லி, அகமதாபாத்-டெல்லி, ஹைதராபாத்-மும்பை ஆகிய உள்நாட்டு விமான சேவைகளும் ரத்தாயின.இதையும் படியுங்கள் : இந்திய பங்கு சந்தைகளில் ஏற்றத்துடன் வர்த்தகம்.. மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றத்தால் பாதிப்பில்லை