சபரிமலை அய்யப்பன் கோவில் தங்கக் கவச முறைகேடு வழக்கில் கைதான தந்திரி ராஜீவரருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திருவனந்தபுரம் சிறப்பு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு, சனிக்கிழமை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. சிறை மருத்துவர்களின் பரிசோதனைக்கு பின்னர், அவர் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். சிகிச்சைக்கு பின்னர் மருத்துவமனை வசதியுள்ள திருவனந்தபுரம் மத்திய சிறையில் தந்திரி ராஜீவரரு அடைக்கப்படுவார் என தெரிகிறது.இதையும் படியுங்கள் : ஐ-பேக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை