ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் பட்டப்பகலில் அரசு அதிகாரி தாக்கப்பட்டது வெட்ககேடானது என்ற முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக சாடினர். புவனேஸ்வர் மாநகராட்சியின் கூடுதல் ஆணையர் Ratnakar Sahoo மக்களிடம் குறைகளை கேட்டறிந்து கொண்டிருந்த போது, அங்கு வந்த மாநகராட்சி உறுப்பினர் ஜீவன் ராவத் மற்றும் 6 பேர் கொண்ட கும்பல், அவரை தரதரவென இழுத்து சென்று முகத்தில் குத்தி சரமாரியாக தாக்கினர். பாஜக பிரமுகர் ஜெகநாத் பிரதானிடம் தவறாக நடந்து கொண்டாயா என கேட்டு அந்த கும்பல் தாக்குதல் நடத்தியது.