தங்கக் கடத்தல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள கன்னட நடிகை ரன்யா ராவின் 34 கோடிக்கும் அதிகமான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. கடந்த மார்ச் 3 ஆம் தேதி துபாயில் இருந்து 12 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை கடத்திவந்தபோது பெங்களூரு விமான நிலையத்தில் நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவரது வீட்டில் சோதனை நடத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள், 2கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகை மற்றும் ரொக்கப் பணத்தை கைப்பற்றினா். இந்நிலையில், தங்கக் கடத்தல் வழக்கில் பண முறைகேடும் நடைபெற்றிருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின்பேரில், அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.