உத்தரபிரதேசத்தில் GOOGLE MAP காட்டிய பாதையை பின்பற்றி சென்ற கார் கட்டி முடிக்கப்படாத பாலத்திலிருந்து கீழே விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். குருகிராம் மாவட்டத்திலிருந்து விவேக் மற்றும் அமித் அகியோர் காரில் திருமண நிகழ்ச்சிக்காக சென்றனர். அப்போது, அவர்கள் GOOGLE MAP காட்டிய பாதையான முடிவடையாத பாலத்தில் சென்ற நிலையில் கார் 50 அடி உயரத்திலிருந்து ராம்கங்கா ஆற்றில் கவிழ்ந்தது. இதில் காரில் பயணித்த இரண்டு பேர் மற்றும் பாலத்தில் வேலை செய்துகொண்டிருந்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.