குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க, தொடர்ந்து 4-வது ஆண்டாக டெல்லியின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது பா.ஜ.க.வின் பழிவாங்கும் அரசியல் என ஆம் ஆத்மி கட்சியும், இந்த விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தான் அரசியல் செய்வதாக பாஜகவும் வார்த்தை போரில் ஈடுபட்டுள்ளதால், டெல்லி அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.