டெல்லியில் மத்திய நிதியமைச்சக மூத்த அதிகாரி விபத்தில் உயிரிழந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி, மாநில பாஜக அரசு மீது ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கும் பட்சத்தில், அவர்களுக்கான முதலுதவி சிகிச்சை செலவில் 50 லட்சம் ரூபாய் வரை அரசே ஏற்கும் திட்டம் டெல்லியில் நடைமுறையில் உள்ளது. ஆனால் பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்து அந்த திட்டத்திற்கு போதிய அளவு நிதி ஒதுக்காததால், பணம் கட்டுவதற்கு பயந்து விபத்தில் காயமடைந்தவர்களை மீட்க யாரும் முன்வருவதில்லை என ஆம் ஆத்மி புகார் தெரிவித்திருக்கிறது. ஆனால் இது முழுக்க முழுக்க பொறுப்பற்ற குற்றச்சாட்டு என பாஜக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.