மும்பை அருகேவுள்ள போரிவலி ரயில் நிலையத்தில் புறப்பட்ட ரயிலில் இருந்து இறங்க முயன்று தடுமாறி விழுந்த பெண்ணை ரயில்வே காவலர் பத்திரமாக மீட்ட பதைபதைக்க வைக்கும் காட்சி வெளியாகி உள்ளது. போரிவலி ரயில் நிலையத்தில் புறப்பட்ட ரயிலில் இருந்து இறங்க முயன்ற பெண் நிலை தடுமாறி தண்டவாளத்தில் விழ சென்றார். இதனை கவனித்த ரயில்வே காவலர் துரிதமாக செயல்பட்டு பெண்ணை பத்திரமாக மீட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், துரிதமாக செயல்பட்ட காவலருக்கு விருது வழங்கப்பட வேண்டும் என பலரும் பதிவிட்டு வருகின்றனர்.