ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்று மாலை அடுத்தடுத்து 17 வாகனங்கள் மீது மோதி 14 பேர் உயிரிழக்க காரணமான லாரி விபத்து தொடர்பான திகிலூட்டும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. லாரி ஓட்டுநர் மது போதையில் இருந்ததே விபத்துக்கு காரணமாக சொல்லப்படுகிறது. இந்த விபத்தில் மேலும் 10 பேர் வரை படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.