ஹைதராபாத் ரங்காரெட்டி மாவட்டத்தில் அரசு பேருந்து மீது டிப்பர் லாரி மோதி கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24-ஆக அதிகரித்துள்ளது. மிரியாலகுடா அருகே ஹைதராபாத் - பிஜபூர் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து மீது ஜல்லி லோடு ஏற்றி சென்ற லாரி மோதி பேருந்து மீது கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் உட்பட 24 பேர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.